தந்தை தாய் பேண்!

இன்றைய உலகம் பணத்தை அச்சாக வைத்து சுழல்கிறது. வயதான தாய் தந்தையரை வெளிநாட்டில் வைத்து பாதுகாக்கும் அளவு வசதி இலட்சத்தில் ஒருவருக்கு அமைந்தால் அது பெரிய விஷயம். சுந்தர் பிச்சை போன்றவர்களுக்கு சாத்தியம்.

மருத்துவம் இன்று பணந்தின்னிகளின் கையில் சிக்கிவிட்டது. தலைவலி என்று போனாலே ஆயிரக்கணக்கில் பிடுங்கிக் கொள்கிறார்கள். அதுவும் வயதானவர்களுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் கட்டி மாளாது.

அப்படியே இருந்தாலும் இன்ஷ்யூரன்ஸ் ஒரு கூந்தலையும் கவர் செய்யாது. அதனால் தாய் தந்தையர் இந்தியாவில் உயிரோடு இருந்தாலே போதும் என்ற கசப்பான முடிவை ஏற்றுக் கொள்பவர்களே பலர்.

பாசம் மாறவில்லை. கைவசம் காசு இருப்பதில்லை. வேலை நிரந்தரம் இல்லை.குடும்பச் செலவிற்கு இருவரும் உழைத்தாக வேண்டிய மன உளைச்சல் வேறு. இதன் மத்தியில் வயதான தாய் தந்தைக்கு இரத்த அழுத்தம் நீரிழிவு எலும்பு முறிவு புற்று நோய் என்றால் எந்த
மகனாலும் மகளாலும் செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால் முடிந்தவரை பணம் அனுப்பிவிடுகிறார்கள்.

சிலர் பலர் பண உதவி வேறு காரணங்களுக்காகவோ சச்சரவாலோ அனுப்புவதில்லை.

கடல்கடக்காதே என்று அன்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனால் வரும் கேடுகளை பட்டியல் இடவில்லை. இன்று நாம் பட்டியல் இட முடியாத ப்ரச்சனைகளைச் சந்திக்கிறோம்!

பாலாறும் தேனாறும் எந்த நாட்டிலும் ஓடவில்லை என்பதைப் புரியவே பல வருடங்கள் ஆகிவிடுகிடும்.

இதற்கு பல கோணங்கள். முதியோர் இல்லங்கள் பெற்றோரை பணத்தை வாங்கிக் கொண்டு கொடுமைப்படுத்துவது கிட்னி திருடுவது உடல்பாகங்களை விற்பது கற்பழிப்பது …… போன்ற ப்ரச்சனைகள் வேறு!

This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a comment