வள்ளுவர் க்ளினிக்

மனசே சரியில்லீங்க! என்ன பண்றது எங்க போறதுன்னு தெரியலீங்க!

இந்த ஸிம்ப்டம்ஸ் இருந்தா வள்ளுவர் க்ளினிக்ல ஒரு மருந்து – இறை வழிபாடு .

அதுதான் ஒரே மருந்துனு வேற சொல்றாரு!

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
#வள்ளுவர்க்ளினிக்

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

வரையறைகள்

போலி அங்கீகாரங்கள் நமக்கு எதற்கு என்ற முதிர்ச்சி வர பல ஆண்டுகள் முயல வேண்டி இருக்கிறது. உலகம் நம்மை ஒரு வரையறைக்குள் கைது செய்ய முயல்கிறது.

அவன் அப்படித்தான். அவள் அப்படித்தான் என்ற வரையறைகள்.

நம் நடத்தை பேச்சு செயல் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறும் என்பதை பலரும் ஒத்துக் கொள்வதில்லை.

இவன் கோபக்காரன் என்று கதைச் சுருக்கம் சொல்லிவிடுகிறார்கள். அதர்மம் கண்டு பொங்குபவன் என்று சொல்லாமல் எதற்கெடுத்தாலும் பொங்குபவன் என்ற பட்டம் தரப்படுகிறது.

நாம் பாராட்டும் தருணங்களையெல்லாம் மறந்துவிடுவார்கள். குறைகளை எடுத்துச் சொல்வதை மட்டும் நினைவில் வைத்து இவன்/இவள் எப்போதும் குறை சொல்பவன்/ள் என்று பரப்பிவிடுகிறார்கள்.

இதற்குப் பயந்து நல்லதை தீயதை எடுத்துச் சொல்லாவிட்டால் ” இவன்/இவள் திருந்திட்டான்/ள்!” என்ற பட்டயம் வேறு.

உண்மையான உணர்வுக்கும் உள்ளத்திற்கும் இடம் எங்குமே இல்லை.

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

அரசாங்கக் கடன்

ஆடம்பரமும் நமக்குத் தேவை. இலவசமும் தேவை. ஆடம்பரங்கள் இலவசமாகவும் தேவை.

கருத்தடை இல்லாமல் உடல் உறவு கொண்டவன் குழந்தை உருவாகாமல் இருக்க வேண்டுவதைப் போல.

ஆடம்பரமும் இலவசமும் கட்டின்றி உறவு கொண்டால் கடன் என்ற குழந்தை பாக்கியம் நிச்சயம்.

பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

அரசாங்கக் கடன்

ஆடம்பரமும் நமக்குத் தேவை. இலவசமும் தேவை. ஆடம்பரங்கள் இலவசமாகவும் தேவை.

கருத்தடை இல்லாமல் உடல் உறவு கொண்டவன் குழந்தை உருவாகாமல் இருக்க வேண்டுவதைப் போல.

ஆடம்பரமும் இலவசமும் கட்டின்றி உறவு கொண்டால் கடன் என்ற குழந்தை பாக்கியம் நிச்சயம்.

பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

Posted in advice | Tagged , , , , | Leave a comment

தந்தை தாய் பேண்!

இன்றைய உலகம் பணத்தை அச்சாக வைத்து சுழல்கிறது. வயதான தாய் தந்தையரை வெளிநாட்டில் வைத்து பாதுகாக்கும் அளவு வசதி இலட்சத்தில் ஒருவருக்கு அமைந்தால் அது பெரிய விஷயம். சுந்தர் பிச்சை போன்றவர்களுக்கு சாத்தியம்.

மருத்துவம் இன்று பணந்தின்னிகளின் கையில் சிக்கிவிட்டது. தலைவலி என்று போனாலே ஆயிரக்கணக்கில் பிடுங்கிக் கொள்கிறார்கள். அதுவும் வயதானவர்களுக்கு மருத்துவ இன்ஷ்யூரன்ஸ் கட்டி மாளாது.

அப்படியே இருந்தாலும் இன்ஷ்யூரன்ஸ் ஒரு கூந்தலையும் கவர் செய்யாது. அதனால் தாய் தந்தையர் இந்தியாவில் உயிரோடு இருந்தாலே போதும் என்ற கசப்பான முடிவை ஏற்றுக் கொள்பவர்களே பலர்.

பாசம் மாறவில்லை. கைவசம் காசு இருப்பதில்லை. வேலை நிரந்தரம் இல்லை.குடும்பச் செலவிற்கு இருவரும் உழைத்தாக வேண்டிய மன உளைச்சல் வேறு. இதன் மத்தியில் வயதான தாய் தந்தைக்கு இரத்த அழுத்தம் நீரிழிவு எலும்பு முறிவு புற்று நோய் என்றால் எந்த
மகனாலும் மகளாலும் செலவுகளைத் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதனால் முடிந்தவரை பணம் அனுப்பிவிடுகிறார்கள்.

சிலர் பலர் பண உதவி வேறு காரணங்களுக்காகவோ சச்சரவாலோ அனுப்புவதில்லை.

கடல்கடக்காதே என்று அன்று சுருக்கமாகச் சொன்னார்கள். அதனால் வரும் கேடுகளை பட்டியல் இடவில்லை. இன்று நாம் பட்டியல் இட முடியாத ப்ரச்சனைகளைச் சந்திக்கிறோம்!

பாலாறும் தேனாறும் எந்த நாட்டிலும் ஓடவில்லை என்பதைப் புரியவே பல வருடங்கள் ஆகிவிடுகிடும்.

இதற்கு பல கோணங்கள். முதியோர் இல்லங்கள் பெற்றோரை பணத்தை வாங்கிக் கொண்டு கொடுமைப்படுத்துவது கிட்னி திருடுவது உடல்பாகங்களை விற்பது கற்பழிப்பது …… போன்ற ப்ரச்சனைகள் வேறு!

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

வேட்டியில் சேலையில் ஓணான்!

எத்தனை முறை சொன்னாலும் இது புரிவதில்லை.
பெண்கள் எந்த ஆணிடமும் தங்கள் இன்பதுன்பங்களைக் கொட்டுவது தொட்டுப் பேசுவது “நான் ரொம்ப ஓப்பன் ஸோஷல் !” என்பது தனியே இருப்பது சுவாசக்காற்று படும் தொலைவில் நிற்பது தனி ஆணுடன் வாக்கிங் போவது கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுவது…. இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பற்றி எரியும் என்றே ஆண் பெண்ணை தனித்தனியாக வைத்தது நம் பண்பாடு.

தள்ளி நிற்கும் வரைதான் தாய் சகோதரி அத்தை சித்தி அக்கா தங்கை பாட்டி மதினி அண்ணி ….. கண்டிக் கொண்டால் பெண்ணே. அதனால் உடல் உடை சொல் செயல் இவற்றில் கண்ணியம் காக்க வேண்டும். இது எந்த யுகத்திற்கும் உள்ள நீதி.

மனம் அன்பு மரியாதை நன்றி இவற்றை ஒரு நொடியில் தூக்கி எரிந்து காமத்தீயில் வெந்து சாம்பலாகி நம் வாழ்வைக் கெடுத்துவிடும்.

சுருக்கமாகச் சொன்னால் மிக மிக அதிக துயரத்திலும் மிக மிக அதிக சந்தோஷத்திலும் தன் கணவனோ மனைவியோ அல்லாத வேற்று மனிதருடன் தனியே இருக்காதீர்கள். மனம் பிறழும் தருணம் அதுவே.

தனிமை ஆனந்தம் துக்கம் நெருக்கம் சொல் செயல் இவை காமத்தின் விறகுகள்.

இதில் கண்ணியம் உள்ளவர்களும் கருகி சாம்பலாகக் கூடும்.

அதனால் தான் உறவைச் சொல்லிச் சொல்லி அழைக்கிறோம். தாய் தந்தை அக்கா பாட்டி அண்ணி சகோதரி…. இப்படி அழைப்பதால் மனம் கண்ணியம் பிறழும் வாய்ப்பு குறைகிறது.

அயல்நாட்டு நாகரிகம் உறவுகள் நண்பர்கள் அனைவரையும் பெயர் சொல்லி Cindy,Natasha, Margaret,John,Andy,…..இப்படி விழிப்பதால் தாத்தா,பாட்டி,அக்கா,தங்கை,சகோதரி,சகோதரன்,…. என்ற உறவை மனம் மறந்தும் கடந்து நீ ஒரு பெண் நான் ஒரு ஆண். எனக்குத் தேவையானது உன்னிடம் இருக்கிறது என்ற மன நிலையில் எப்போதும் தொடர்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் தடைபோட யாரும் இல்ல கண்ணாளா என்று நாசமாய்ப் போகிறது.

காமத்தில் அது என்ன தவறான காமம் என்றால் யாரும் அறியாமல் அனுபவித்தாலும் மன சாட்சி புரட்டிப் புரட்டிப் போட்டு அடிக்கும்.

குற்றமே தண்டனை! அப்படி ஒரு வாழ்வு தேவையா? எனக்குத் தெரிந்து சில பெண்கள் சில்மிஷத்திற்கு ஆளானார்கள்.ஆனால் சுதாரித்துக் கொண்டார்கள். அதனால் சகோதர சகோதரிகளே வரம்பு மீறாதீர்கள்.

எவ்வளவு நெருக்கமானாலும் பதிவுகளில் இன்பாக்ஸில் வாடா போடா வாடி போடி என்று விளிக்காதீர்கள்! இல்லை அவன்/அவள் என் க்ளாஸ்மேட் அப்டி இப்டி என்று சமாதானம் சொன்னாலும் பள்ளி கல்லூரிக் காலங்கள் கடந்தும் மாற்றுப் பாலாரை ஒருமையில் அழைப்பது பல சிக்கல்களை உருவாக்கும்.

இதெல்லாம் ஓல்ட் ஸ்டைல் என்பவர்களுக்கு வேட்டியில் ஓணான் ஏறுவது நிச்சயம்.

#வேட்டியில்சேலையில்ஓணான்

Posted in ஆண் பெண் | Tagged , , , | Leave a comment

காப்பி டீ

சிறிது சிறிதாக விடுங்கள்.

நான் ஒரு நாள் தீர்மானித்தேன் .

விட்டுவிட்டேன்.

சில பல வாரங்கள் தலைவலி தொடர்ந்தது!

நமது இரத்த நாளங்கள் 20-25% விரிவடைவதால் அந்த தலைவலி.

அதாவது நமது இரத்த அழுத்தம் நிரந்தரமாகக் குறைந்துவிடும்.

காஞ்சிப் பெரியவர் காப்பி டீ குடிக்காதீர்கள் என்கிறார்.

அதைக் கேட்க்காவிட்டால் என்ன பயன் என யோசித்தேன்.

விட்டுவிட்டேன்!

ஓராண்டு கடந்துவிட்டது.

சென்ற மஹாலய ஆரம்பத்தில் விட்டேன். இவ்வருட மஹாலயம் நிறைவடைய உள்ளது.
#காப்பிடீ

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

பிஸ்னஸ்

வாமனனாய்த் தோன்றி உலகளந்த பெருமாளாய் வளரும் என்று நினைத்தால் பள்ளி கொண்ட பெருமாளாய் படுத்துவிடுகிறது!

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment

பெண்ணை எப்படிப் பார்க்கிறீர்கள்?!

பெண்ணை இன்னொரு உயிராகவே பார்க்கிறேன்.

உயர்வாகவோ தாழ்வாகவோ போட்டியிட வேண்டிய அடிமைப்பட வேண்டிய அடிமைப்படுத்தப்பட வேண்டிய இன்னொரு நபராகவோ பார்ப்பதில்லை!

ஒவ்வொரு ஆன்மாவும் உலகில் பல கனவுகளைச் சுமந்து வருகிறது.

அந்தக் கனவுகளை(தர்மத்திற்கு உட்பட்டது என்றால்) தடை செய்ய யாருக்கும் உரிமையில்லை.

இந்த உடல் ஒருவர் மற்றவருக்கு உதவி அவரவர்களின் நியாயமான கனவுகளை மெய்ப்பட உழைத்து பின் அமைதியாக இந்த உலகை விட்டுச் செல்லவே!

ஊருக்கு ஊறு விளைவிக்காமல் ஊர் நமக்கு ஊறு விளைவிக்கவிடாமல் வாழ்ந்து மறைவதே நிறைவான வாழ்க்கை!

இதற்கு மேல் வாழ்விற்கு வேறு பொருள் இல்லை!

Posted in ஒழுக்கம், பெண், பெண்மை, வாழ்க்கை, Moral values | Tagged , , , , , | Leave a comment

மனநோய்!

ஏற்றத் தாழ்வு ஒரு மன நோய்.

இது சாதி மதம் இனம் குலம் பால் தினை மொழி நாடு இப்படி ஏதோ ஒன்றை காரணம் காட்டி வளரும்.

சாதியை அழித்தால் மதத்திற்கு தாவும்.

மதத்தை அழித்தால் இனத்துக்குத் தாவும்.

இனத்தை அழித்தால் மொழிக்குத் தாவும்.

மொழியை அழித்தால் பாலுக்குத் தாவும்!

எதை அழித்தாலும் மன நோய் அழியாது.

நல்ல சிந்தனைகளாலும் நிலையாமையை உணர்வதால் மட்டுமே ஏற்றத்தாழ்வு என்ற மனநோய் அழியும்!

Posted in ஏற்றத் தாழ்வு | Tagged , , , , , , , , , | Leave a comment