நிறுத்தம்!(பார்க்கிங்!)

நான் மிகவும் குறைந்த இடைவெளிகளில்,அதாவது இரண்டு கார்களுக்கு நடுவில் என் காரை நிறுத்த முயல்வதில்லை.
ஏனென்றால் இடிக்குமோ இடிக்காதோ என்ற அச்சமும் நேர விரையமும் ஏற்படுவதால்!

அதைப்போலவே என் செயல்கள் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் உள்ள குறுகிய வித்தியாசத்தின் ஊடே செயல்படும் கட்டாயம் வரும்பொழுது ,அது அதர்மமாகவும் முடியக் கூடும் என்பதால் அச்செயல்களைத் தவிர்த்து
தெளிவாக தவறு நேரவாய்ப்பில்லாதவாறு செயல்பட முயற்சிக்கிறேன்.

சில நேரங்களில் வேறு வழியில்லாவிட்டால் மெனக்கெட்டு குறுகிய இடைவெளியில் இடிக்காமல் வண்டியை நிறுத்துவேன்! செயல்களும் அப்படியே!

This entry was posted in advice, நீதி, நீதி நெறி, வாழ்க்கை, வாழ்வு, Moral values. Bookmark the permalink.

Leave a comment