அப்பா! இந்த zip சரி பண்ண முடியுமா?

மகள் கேட்டாள். ” பல விஷயங்கள் வாழ்க்கையில் முடியாதது போல தோன்றும். முயலவேண்டும். தோற்றால் அனுபவம் கூடும். வென்றால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்! என்னால் இதைச் சரி செய்ய முடியும் !” என்றேன்.
5 நிமிடத்தில் தனியாக பிரிந்து பல்லும் உடைந்த zip இணைந்தது. ஆச்சரியப்பட்டாள்!
” இதுதான் நான் உனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் !” என்றேன்.
” உண்மை! அப்பா!” என்றாள்.

பின் விலகாமல் இருக்க கறுப்பு நூலால் கைத்தையல் போட்டேன்!

முயற்சித் திருவினை யாக்கும்
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
image

This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

Leave a comment